கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

வெளியானது குக் வித் கோமாளி 3 ப்ரமோ: இந்த முறை யாரெல்லாம் கோமாளிகள்?

விஜய் டிவி குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியானது 

News image
Updated On :28 ஜனவரி 2024, 11:18 am IST

விஜய் டிவியில் கடந்த வருடம் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பொழுது, சமூக வலைதளங்கள் மூழுவதும் அந்த நிகழ்ச்சி குறித்த பதிவுகள் தான் அதிகம் காணப்பட்டன. 

இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட தர்ஷா ருத்ர தாண்டவம் படத்தில் நாயகியாக நடித்தார். மற்றொரு போட்டியாளரான பவித்ரா நாய் சேகர் படத்திலும், அஸ்வின் குமார் என்ன சொல்ல போகிறாய் படத்திலும், சிவாங்கி, சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நடித்து வருகின்றனர். 

மேலும், புகழ், சூர்யவின் எதற்கும் துணிந்தவன், அஜித்துடன் வலிமை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். அதே போல தீபாவும் ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இது இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்புக்கு ஒரு உதாரணம். 

இந்த நிகழ்ச்சியின் 3வது பாகம் எப்பொழுது ஒளிபரப்பாகும், அதில் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியானது. இந்த ப்ரமோவில் சிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை ஆகியோருடன் செஃப் தாமு, வெங்கடேஷ் பட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

''இது குக் வித் கோமாளி, முடிஞ்சா சிரிக்காம சமாளி'' என்ற வசனத்தை இறுதியில் புகழ் பேசுகிறார். இதனால் இந்த நிகழ்ச்சியில் புகழ் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.