12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பா.ரஞ்சித்தின் 'சார்பட்டா பரம்பரை'யில் இருந்து வெளியான விடியோ பாடல்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தில் இருந்து வம்புல தும்புல விடியோ பாடல் வெளியாகியுள்ளது. 

Video song out from Pa.Ranjith's Sarpatta Parambarai

Published On :

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தில் இருந்து வம்புல தும்புல விடியோ பாடல் வெளியாகியுள்ளது. 

பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. 1980களில் காலக்கட்டங்களில் நடைபெறும் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ஆர்யா கதநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். 

மேலும் பசுபதி, கலையரசன், சஞ்சனா நடராஜன், அனுபமா குமார், சந்தோஷ் பிரதாப், ஜான் கொக்கென், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வருகிற ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைம் விடியோவில் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து, வம்புல தும்புல என்ற பாடல் விடியோ வெளியாகியுள்ளது. 

கபிலன் எழுதியுள்ள இந்த பாடலை , கானா முத்து, இசைவாணி, சந்தோஷ் நாராயணன், கானா தரணி உள்ளிட்டோர் பாடியுள்ளனர். வெற்றிக்கொண்டாட்ட பாடலாக இது அமைந்துள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு பா.ரஞ்சித் வெளியாகவிருக்கும் படம் என்பதால் சார்பட்டா பரம்பரை படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.