கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

குழந்தைப் பருவ புகைப்படத்தை பகிர்ந்த பிரபல நடிகை - யாரென்று தெரிகிறதா ?

தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார்.  

Published On :

தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார். 

பேரரசு இயக்கத்தில் உருவான 'பழனி' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த' நான் மகான் அல்ல', 'துப்பாக்கி','விவேகம்', 'மெர்சல்', 'கோமாளி' உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

Story image

தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'லிவ் டெலிகாஸ்ட்' என்ற இணையத் தொடரிலும் நடித்துள்ளார். தற்போது நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து 'ஹே சினாமிகா' என்ற படத்தில் நடித்து வருகிறார். 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இவர் நடித்துவந்த இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்பொழுது துவங்கும் என அறிவிக்கப்படவில்லை. கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைப் பருவ புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.