தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்தேர்தல் ஆணையம் நோக்கி அக். 6 பேரணி! போராட்டங்களை அறிவித்த இந்தியா கூட்டணி!ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

நடிகர் அமர சிகாமணி காலமானார்

அந்நியன், சிவாஜி, சதுரங்கம், ரமணா, எவனோ ஒருவன் போன்ற படங்களிலும்

Published On :

குணச்சித்திர நடிகர் அமர சிகாமணி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 70.

தமிழ்ப் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர் அமர சிகாமணி. 1950-ம் ஆண்டு நவம்பர் 12 அன்று பிறந்தார். அந்நியன், சிவாஜி, சதுரங்கம், ரமணா, எவனோ ஒருவன் போன்ற படங்களிலும் சின்னத்திரையில் பொன் ஊஞ்சல், அகல்யா, சொந்தம், உறவுகள், கதை நேரம் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். கவிஞர், வசனகர்த்தா எனத் தன்னுடைய பல்வேறு திறமைகளையும் வெளிப்படுத்தினார். தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அமர சிகாமணிக்கு சியாமளா தேவி என்கிற மனைவியும் மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளார்கள். 

அமர சிகாமணியின் மறைக்கு சின்னத்திரை கலைஞர்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.