/

இப்பொழுதாவது வெளியாகுமா ?: அதர்வா படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

நடிகர் அதர்வாவின் புதிய படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:08 am

DIN

தெலுங்குப் படமான நின்னு கோரி படத்தின் தமிழ் பதிப்பான தள்ளிப் போகாதே படத்தில் அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்துள்ளனர். தமிழில் இந்தப் படத்தை ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை படங்களின் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். 

மேலும் எம்.கே.ஆர்.பி புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் கண்ணன் தனது மசாலா பிக்ஸ் சார்பாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தை மேஜிக் ரேய்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 

Story image

சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். பல்வேறு முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும் இந்தப் படம் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இந்தப் படம் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பிஸ்கோத் படத்தை கண்ணன் இயக்கியிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.