பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாம் பட டீசர் வெளியாகியுள்ளது.
பிரபாஸ் - பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள திரைப்படம் ராதே ஷ்யாம். இந்தப் படத்தை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் தயாரிக்க ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் வருகிற பொங்கலை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சீனா மற்றும் ஜப்பானீஸ் மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இன்று (23/10/21) பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் ஏற்றுள்ள விக்ரமாதித்யா வேடத்தை விளக்கும் விதமாக டீஸர் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | உதயநிதி ஸ்டாலினை திடீரென சந்தித்த 'வலிமை' தயாரிப்பாளர்
ராதே ஷ்யாம் படத்தில் சச்சின் கடேகர், பிரியதர்ஷி, பாக்யஸ்ரீ, ஜெகபதி பாபு, முரளி ஷர்மா, குனால் ராய் கபூர், ரிதி குமார், ஷாஷா செத்திரி, சத்யன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். மனோஜ் பரமஹம்சா தற்போது நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு தற்போது ஒளிப்பதிவு செய்து வருகிறார். ராதே ஷ்யாம் படத்துக்கு தமிழ் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கர்களை வெளியேற வலியுறுத்தும் அமெரிக்கா!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 1 - நேரலை!

பியார் பிரேமா கல்யாணம் திரைப்படத்தின் முதல் பாடல்!
காமன்வெல்த்: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் ஊக்கத்தொகை அறிவிப்பு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



