137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

''அண்ணாத்த படத்தின் டிக்கெட் விலை ரூ.2925? முதல்வரின் மகன் இப்படி செய்யலாமா?'': இயக்குநரின் பதிவுக்கு ரசிகர்கள் பதிலடி

அண்ணாத்த படத்தின் டிக்கெட் விலைகுறித்து தவறாக பதிவிட்ட பிரபல இயக்குநரை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 

Updated On :

அண்ணாத்த படத்தின் டிக்கெட் விலைகுறித்து தவறாக பதிவிட்ட பிரபல இயக்குநரை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரஜினிகாந்த் கிராமத்துக் கதையில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. டிரெய்லரின் அடிப்படையில் இந்தப் படம் அண்ணன் - தங்கை பாசத்தை அடிப்படாயாகக்கொண்டு உருவாகியுள்ளதாக புரிந்துகொள்ளமுடிகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். 

Story image

இந்த நிலையில் இயக்குநர் மு.களஞ்சியம் அண்ணாத்த படத்தின் டிக்கெட்டை பகிர்ந்து, ''ஒரு அண்ணாத்த டிக்கெட் விலை ரூ.2925. இது பகற்கொள்ளை இல்லையா ? முதல்வரின் மகன் இப்படி செய்யலாமா? அரசு அனுமதிக்கலாமா? தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டிக்காதா ? இந்த கரோனோ காலத்தில் இதுபோன்று கொள்ளையடித்தால் எப்படி மக்கள் திரையரங்குக்கு வருவார்கள் ? சிஸ்டம் கெட்டுப்போச்சுன்னவர் இதை கேட்க மாட்டாறா'' என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது அவர் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.2925 என புரிந்துகொண்டுள்ளார். ஆனால் அந்த டிக்கெட்டில் 15 டிக்கெட்டுகளுக்கான விலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு ரசிகர்கள், ''தயவுசெய்து உங்கள் பதிவை நீக்குங்கள். அதில் 15 டிக்கெட்டுகளுக்கான விலை என்று குறிப்பட்டுள்ளது. நன்றாக பாருங்கள்'' என அவரை விமர்சித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.