மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ரஜினி, அஜித்துடன் மோதும் சிம்பு : 'மாநாடு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 6:17 am

DIN

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இருந்து மெகரசைலா பாடல், மற்றும் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்தப் படத்தின் அடுத்தப் பாடல் குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. நடிகர் அஜித்தின் வலிமை படமும் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படும் நிலையில் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிம்புவை ஒப்பிடுகையில் ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் ஆகியோருக்கு ரசிகர்களின் பலம் அதிகம். இரு பெரிய படங்களையும் சமாளித்து மாநாடு வெற்றி பெறுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இருப்பினும் படம் நன்றாக இருந்தால் நிச்சயம் வெற்றி பெறும் என்பது வரலாறு. இருப்பினும் சினிமா ரசிகர்களுக்கு இந்த தீபாவளியின் போது நல்ல விருந்து காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.