ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

''கேன்சர்னு தெரிஞ்சதும் 3 மணிநேரம் அழுதேன்': மீண்டுவந்த கதையைப் பகிர்ந்துகொண்ட சஞ்சய் தத்

புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த கதையை நடிகர் சஞ்சய் தத் பகிர்ந்துகொண்டார்.  

News image
Updated On :20 ஏப்ரல் 2022, 11:05 am

DIN

நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்த 'கேஜிஎஃப் 2' படம் 6 நாட்களில் 600 கோடி ரூபாய் வசூலைப் பெற்று இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. 

இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகர் சஞ்சய் தத் பேட்டியளித்தார். அதில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது தொடர்பாகவும், அதிலிருந்து மீண்டது தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, ''எனக்கு புற்றுநோய் என தெரிந்ததும் நான் மூன்று மணி நேரம் அழுதேன். காரணம் நான் அப்பொழுது எனது மனைவி, குழந்தைகளின் வாழ்க்கை குறித்து சிந்தித்தேன். ஆனாலும் நான் என் வலிமையை இழக்க விரும்பவில்லை. 

என் முடியை இழந்துவிடுவேன் என்றார்கள். எனக்கு வாந்தி வரும் என்றார்கள். ஆனால் நான் எனக்கு எதுவும் ஆகாது. நான் முடியை இழக்க மாட்டேன். எனக்கு வாந்தி வராது. நான் படுக்கையில் விழுந்து கிடக்கமாட்டேன் என்றேன். 

கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு நான் ஒரு மணிநேம் உடற்பயிற்சி செய்தேன். ஒவ்வொருமுறையும் நான் அப்படி செய்தேன். கீமோதெரபி சிகிச்சைக்காக நான் துபை சென்றேன் சிகிச்சை முடிந்ததும் 3 மணி நேரம் பேன்ட்மிட்டன் விளையாடினேன். 

முதலில் விசா கிடைக்காததால் ஹிருத்திக் ரோஷனின் தந்தையின் அறிவுரையின் பேரில் இந்தியாவிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டேன். கீமோதெரபிக்கு மட்டும் துபை சென்றுவந்தேன். தற்போது புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமாகியிருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.