மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகைப்படம் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 11:11 am

DIN

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகைப்படம் பகிர்ந்துள்ளார். 

நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகிறார். மேலும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மீரா என்ற தொடரில் முதன்மை வேடத்தில் நடித்துவருகிறார். 

குஷ்புவின் மீரா தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. மேலும் தனது அவ்னி சினி கிரியேஷன்ஸ் சார்பாக திரைப்படங்களையும் தயாரித்துவருகிறார். சுந்தர்.சி மற்றும் ஜெய் இணைந்து நடித்துள்ள பட்டாம்பூச்சி என்ற படத்தை தயாரித்துவருகிறார். 

இந்த நிலையில் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமைனையில் சிகிச்சைபெறும் படத்தை பகிர்ந்து தான் குணமாகிவருவதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் எதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைபெறுகிறார் என்பதை தெரிவிக்கவில்லை. இதனையடுத்து அவர் விரைவில் குணமடைய பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.