'சூரரைப் போற்று' பட நீக்கப்பட்ட சண்டைக்காட்சி விடியோ இதோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று பட நீக்கப்பட்ட சண்டைக்காட்சி விடியோ வெளியாகியுள்ளது. 
'சூரரைப் போற்று' பட நீக்கப்பட்ட சண்டைக்காட்சி விடியோ இதோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று பட நீக்கப்பட்ட சண்டைக்காட்சி விடியோ வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் சூரரைப் போற்று திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி, சிறந்த பின்னணி இசை - ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதை சுதா கொங்கரா, சிறந்த படம் என 5 தேசிய விருதுகளை வென்றது. 

தற்போது இந்தப் படத்தை சுதா கொங்கரா ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் ரீமேக் செய்துவருகிறார். இந்தப் படத்தில் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குநர் சுதா கொங்கரா ஹிந்திக்காக இந்தப் படத்தில் சண்டைக்காட்சிகளை இணைத்துள்ளதாக தெரிவித்திருந்தார். 

தமிழிலும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு நீக்கப்பட்டிருக்கிறது. நீக்கப்பட்ட சண்டைக்காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.  

சூரரைப் போற்று படம் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையிலுள்ள திரையரங்கம் ஒன்றில் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. அப்போது திரையரங்குக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சுதா கொங்கரா வந்து ரசிகர்களுடன் படம் பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதா கொங்கரா அடுத்ததாக சூர்யாவுடன் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com