தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் !

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டுள்ளார். 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 11:17 am

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டுள்ளார். 

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிபெற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார் சிவகார்த்திகேயன். பின்னர் விஜய் டிவியின் அது இது எது, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக தொகுத்து வழங்கினார். 

ஒரு தொகுப்பாளருக்கு இவ்வளவு ரசிகர்களா என வியக்க வைக்கும் அளவுக்கு இருந்தது அவருக்கு கிடைத்த வரவேற்பு. பின்னர் திரையுலகில் அறிமுகமாகி அவர் அடைந்த இமாலய உயரம் அனைவரும் அறிந்தது. 

Story image

எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் விஜய் டிவியை சிவகார்த்திகேயன் மறப்பதில்லை. விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுவருகிறார்.

கடந்த ஆண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியாளர்களுடன் அனைவரையும் கலாய்த்தார். டான் வெளியீட்டின் போது மீண்டும் சீசன் 3யிலும் பிரியங்கா மோகனுடன் கலந்துகொண்டார். 

இந்த நிலையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.