விஜய் 67 படத்தைக் கைப்பற்றிய ஓடிடி நிறுவனம் இதுதான்!

விஜய் 67 படத்தைக் கைப்பற்றிய ஓடிடி நிறுவனம் இதுதான்!

விஜய்யின் 67 -வது ஓடிடி வெளியீட்டை கைப்பற்றிய நிறுவனம் குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.
Published on

விஜய்யின் 67 -வது ஓடிடி வெளியீட்டை கைப்பற்றிய நிறுவனம் குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இந்தப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிப்பார் என ஏற்கனவே தகவல் வெளியானது. 

லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் 67வது படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் நேற்று நடைபெற்றுள்ளது. மேலும் விஜய் 67 பட அறிவிப்பு டீசர் படப்பிடிப்பிற்காக பிரசாத் ஸ்டுடியோவில் இரண்டு செட்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Lokesh kanagaraj At AVM Studio
To Going Thalapathy67 Poojai#ThalapathyVijay #Thalapathy67pooja #thalapathy67 pic.twitter.com/KclQd8eLaI

— Vijay (@actorjoseph1974) December 5, 2022

விஜய் 67 படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் பின்னணியில் தயாராக உள்ளதால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.160 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com