
அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், யாருக்கு அதிக திரையரங்கம் ஒதுக்கப்படும் என்கிற கேள்விகள் எழுந்தன.
வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ “அஜித்துடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் விஜய்தான் நம்பர்.1 இடத்தில் இருக்கிறார். ஆனால், வாரிசு படத்திற்கு குறைவான திரைகளே ஒதுக்கப்பட்டுள்ளன. நான் சென்னைக்கு சென்று உதயநிதியை சந்தித்து கூடுதல் திரைகள் குறித்துப் பேசப்போகிறேன்’ என நேர்காணல் ஒன்றில் பேசிய விடியோ வைரல் ஆனது. இதனால் அஜித் ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். தொலைக்காட்சி விவாதங்களில் கூட இது பேசு பொருளானது.
தற்போது வாரிசு படத்தின் தமிழ்நாட்டில் யார் யார் வெளியிடுகிறார்கள் என விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு. இதில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதிகளில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறதென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் மூலம் அஜித்தின் துணிவு படத்துடன் வாரிசு படத்தினையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவது உறுதியாகியுள்ளது.
யார் நம்பர்.1 நடிகர்? அஜித் மேலாளரின் பதிலடி ட்வீட்?
மீடியா முன்பு பேசுவதற்கே பயமாக இருக்கிறது: தயாரிப்பாளர் தில் ராஜூ
கதாநாயகனானார் ‘ராட்சசன்’ வில்லன்
”உதயநிதியை சந்திக்கிறேன். தமிழகத்தில் விஜய்தான் நம்பர்.1..” ஆவேசமான தில் ராஜூ
’வியக்க வைக்கும் பிரம்மாண்டம். ஆனால்..’ அவதார் -2 | திரைவிமர்சனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.