சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

இன்ஸ்டாகிராம் தீப்பற்றி எரிகிறது: பூஜா ஹெக்டேவின் புதிய படத்திற்கு ரசிகர் கமெண்ட்! 

பிரபல நடிகை பூஜா ஹெக்டேவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:21 pm IST

தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட் படத்தின் மூலம் பலரின் மனதில் இடம் பிடித்தார். 

இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும், ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார். அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

Story image

இதேபோன்று பாலிவுட்டிலும் மொஹஞ்சதாரோ' என்ற படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ரன்வீர் சிங் உடன் 'சர்க்கஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனிடையே தமிழில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வீரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் சல்மான் கான் நாயகனாக நடிக்கிறார். 

Story image

இன்ஸ்டாகிராமில் பூஜாவின் புகைப்படத்திற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் அவர் பகிர்ந்த புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு ரசிகர், “இன்ஸ்டாகிராமே தீப்பற்றி எரிகிறது” என கமெண்ட் செய்துள்ளார். ஆமாம் இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.