தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அண்ணனின் புதிய படத்தை அறிமுகப்படுத்தும் தம்பி! 

ஜித்தன் ரமேஷ் நடிக்கும் புதிய படத்தினைப் பற்றி நடிகர் ஜீவா புதிய போஸ்டரை வெளியிட உள்ளார். 

News image
Updated On :24 டிசம்பர் 2022, 6:47 am

DIN

2005இல் வெளியான ஜித்தன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மகன் ரமேஷ். இவர் நடிகர் ஜீவாவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

‘ஜித்தன்’ படத்தின் வெற்றி மூலம் ஜித்தன் ரமேஷ் என அழைக்கப்பட்டார். ஆனால் அந்தப் படத்திற்குப் பிறகு மற்றைய படங்கள் எதுவும் பெரிதாக வசூலை குவிக்காத்தால் அவருக்கான மார்க்கெட் இழந்தார். 

கடைசியாக 2019இல் வெளியான ‘உங்கள் போடனும் சார்’ படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. பின்னர் பிக்பாஸ் 4இல் பங்கேற்று மீண்டும் சினிமாவில் வருவதற்கான ஆயுத்தமாக உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

தற்போது அபிலாஷ் ஜி தேவன் எழுதி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். ‘ரூட் நம்பர் 17’ என தலைப்பிடப்படுள்ள இந்தப் படத்திற்கு மலையால இசையமைப்பாளர் ஔச்சேப்பன் இசையமைக்க, பிரசாந்த் பிரணவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் ஜீவா நாளை (டிச.25) மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.