
துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது சீதா ராமம் திரைப்படம். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். 5 மொழிகளில் வெளியாகி பெறும் ஆதரவினைப் பெற்றது.
தற்போது சீதா ராமம் வெற்றியை தொடர்ந்து கிங் ஆஃப் கோதா என்ற புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்தினை அபிலாஷ் ஜோஷி இயக்குகிறார். ஜீ ஸ்டூடியோஸ் இந்த படத்தினை தயாரிக்கிறது. இந்தப் படமும் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா என 5 மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு துலகர் சல்மான் அவரது மனைவி அமல் சூபியா உடன் திருமணம் நடந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை கொண்டாடினர். இதனையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதற்கு காஜல், மிர்னால் தாகூர், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
துலகர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது:
சிறிது தமாதாமான பதிவு! ஆனால் உனக்கு தெரியும் இது மகிழ்ச்சியான நாளென. 11 ஆண்டுகள் திருமண வாழ்த்துகள் அமல். எனக்கு தெரியவில்லை காலம் எங்கே சென்றதென. எனது தாடி எப்போது நிறம் மாறியதெனவும் தெரியவில்லை. நாம் எப்போது புதிய வீட்டினை வாங்கினோம் எனவும் தெரியவில்லை. நான் இந்த சாதனைகளை எல்லாம் திரும்பி பார்க்கும்போது இது வேறொருவர் வாழ்க்கை மாதிரி இருக்கிறது. ஆனால் நாம் இப்போது நம்முடைய சொந்த கதையை எழுதிக்கொண்டு இங்கிருக்கிறோம்.
பெற்றோர்களாக இருப்பதாலும் இன்னும் சில காரணங்களாலும் இந்த பதிவு காலதாமதாமானது.
‘அன்புனா என்ன?’ - விஜய் கூறிய குட்டி ஸ்டோரி!
ரசிகர்களுடன் செல்பி விடியோ எடுத்து பதிவிட்ட விஜய்: ட்விட்டரில் வைரல்!
வாரிசு இசை வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு கிடையாது: எங்கு பார்க்க முடியும்?
‘கோல்டு’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
வாரிசு படத்தில் அனிருத்தும் பாடியுள்ளார்: இதோ 5 பாடல்களின் விவரம்!
மோகன்லாலுடன் நடிக்கவிருக்கும் கமல்?