பாரிஸ் நகரில் ‘துணிவு’ போஸ்டர்!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் துணிவு படத்தின் விளம்பர போஸ்டர் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.


பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் துணிவு படத்தின் விளம்பர போஸ்டர் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: துணிவு படத்திற்கு வானத்தில் வேற லெவல் புரமோஷன்!
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா..சில்லா’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான ‘காசேதான் கடவுளடா’ பாடலும், கேங்ஸ்டா பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

துணிவு படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வானத்தில் ஸ்கை டைவிங் செய்து துணிவு படத்தின் அப்டேட் கொடுத்து ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் படக்குழுவினர் மிதக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் சாலையோரம் துணிவு படத்தின் விளம்பர போஸ்டர் வைக்கப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...