பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஹிந்தி பேசத் தெரியுமா?: ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதி ஹாசன்

தென்னிந்தியாவிலிருந்து வரும் உங்களுக்கு ஹிந்தி பேசத் தெரியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:23 am

DIN

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களின் கேள்வி பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர், நீங்கள் தென்னிந்தியாவிலிருந்து வருகிறீர்கள். உங்களுக்கு ஹிந்தி பேசத் தெரியுமா? என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த ஸ்ருதி ஹாசன், ''நாங்கள் திரைப்படங்களை உருவாக்கி வருகிறோம். கடுமையாக உழைக்கிறோம். 2022ல் இனம், மொழி உட்பட பாரபட்சம் பார்பதற்கு நேரம் இல்லை'' என்று குறிப்பிட்டுள்ளார். 

ஸ்ருதி ஹாசன் ஹிந்திப் படமான லக் மூலம் தான் நடிகையாக திரையுலகில் அறிமுகமானார். ராமையா வஸ்தாவயா, டிடே, கப்பார் இஸ் பேக் போன்ற ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பிரபாஸுடன் இணைந்து சலார் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கேஜிஎஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்குகிறார். இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.