சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

''எல்லா புகழும் அவருக்கே'': 15வது ஆண்டில் பருத்தி வீரன்: கார்த்தி நெகிழ்ச்சி

பருத்திவீரன் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதையொட்டி இயக்குநர் அமீருக்கு நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.

Updated On :

பருத்தி வீரன் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளாகிறது. அதாவது நடிகர் கார்த்தி திரையுலகில் அடியெடுத்துவைத்து 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். முதல் படத்திலேயே தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்தார் கார்த்தி.

படம் முழுக்க பருத்திவீரனாகவே வாழ்ந்திருப்பார். அமீர் இயக்கிய இந்தப் படத்தில் யுவனின் பாடல்களும், பின்னணி இசையும் ராம்ஜியின் ஒளிப்பதிவும் படத்தை கூடுதல் சுவாரசியப்படுத்தியது. 

இந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பதிவில், ''பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகனாக களமிறங்கியதற்காக நான் ஆசிர்வதிக்கப்படவனாக உணர்கிறேன். இந்தப் படத்தில் என்னுடைய என்னுடைய ஒவ்வொரு அசைவும் இயக்குநர் அமீரால் வடிவமைக்கப்பட்டது. அவர் சொல்லிக்கொடுத்துதான் நான் நடித்தேன். எல்லா பெருமையும் அவரையே சேரும். 

இந்தப் படத்தின் மூலம் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன். அவர் எனக்கு கற்றுக்கொடுத்த விதத்தின் காரணமாக, நான் என் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்தேன்.  என்னை இந்த இடத்துக்கு அழைத்து சென்ற இயக்குநர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல், அண்ணா, என்னுடைய ரசிகர்கள், ஊடகத்தினர் அனைவருக்கும் நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.