நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ரஹ்மான் இசை, வடிவேலு நகைச்சுவை - பிரம்மாண்டமாக தயாராகும் உதயநிதி, மாரி செல்வராஜ் படம்

உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாரி செல்வராஜ் இணையும் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாகவும் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :3 ஜனவரி 2022, 11:08 am

DIN

உதயநிதி ஸ்டாலின் தற்போது ஆர்டிக்கிள் 15 படத்தின் தமிழ் பதிப்பான நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கிறார். இந்தப் படம் குறித்து நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் மற்றும் நடிகர் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. 

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாகவும், நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.