ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

வெளியானது 'கனா காணும் காலங்கள்' ப்ரமோ விடியோ

கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியின் ப்ரமோ விடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

News image
Updated On :4 ஜனவரி 2022, 9:18 am

விஜய் டிவியில் பள்ளி காலங்களை நினைவுபடுத்தும் விதமாக ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியின் சாயலில் பட்டாளம் உள்ளிட்ட சில திரைப்படங்களும் உருவானது. 

பின்னர் இந்த நிகழ்ச்சியின் அடுத்த அத்தியாயமாக கல்லூரி கால வாழ்க்கையை சொல்லும் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த நிகழ்ச்சி மீண்டும் தயாராகியுள்ளது. இந்த முறை விஜய் டிவியில் இல்லாமல் நேரடியாக டிஸ்னி ஃபிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இதற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.