நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனாக அனுஷ்கா சர்மா: சக்தா எக்ஸ்பிரஸ் பட விடியோ இதோ

அனுஷ்கா சர்மா நடிக்கும் சக்தா எக்ஸ்பிரஸ் பட அறிமுக விடியோ வெளியாகியுள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 9:10 am

DIN


இந்தியா முழுவதும் உண்மை சம்பவங்களையோ அல்லது உண்மை நிகழ்வுகளையோ அடிப்படையாகக் கொண்டு படங்கள் உருவாகுவது தான் புது டிரெண்ட். அந்த வகையில் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஜெய் பீம், கர்ணன், தலைவி, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நடிகர் மாதவன் ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி நடித்து இருக்கிறார். ஹிந்தியிலும் ஏகப்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

இந்த நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வராலற்றை அடிப்படையாகக் கொண்டு சக்தா எக்ஸ்பிரஸ் என்ற படம் உருவாகிறது. 

நடிகை அனுஷ்கா சர்மா ஜுலன் கோஸ்வாமியாக நடிக்கிறார். இந்தப் படம் நேரடியாக நெட்பிளிக்ஸில் உருவாகிறது. இந்தப் படத்தை அறிவிக்கும் விதமாக விடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.