6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிக்பாஸ் மேடையில் கமல்ஹாசனுடன் சிவகார்த்திகேயன்: முக்கிய தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் சிவகார்த்திகேயன் தோன்றும் ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :16 ஜனவரி 2022, 10:57 am

DIN

தமிழ் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய தினம் கடைசி நாள் என்பதால் போட்டியில் வெல்லப்போவது யார் என்பது இன்று அறிவிக்கப்படும். 

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டுள்ளார். அப்போது சிவகார்த்திகேயனை தனது படத்தின் கதாநாயாகன் என கமல் அறிமுகப்படுத்துகிறார். 

இதனையடுத்து நிகழ்ச்சி மேடையில் பேசும் சிவகார்த்திகேயன், என்னால் அலைபேசி இல்லாமல் 3 மணி நேரம் கூட இருக்க முடியாது. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ. பிக்பாஸ் வீட்டில் நிறைய நாட்கள் இருக்கும் அனைவருமே வெற்றியாளர்கள் தான். 3 பேருக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். 

கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனாக நடிக்கவிருக்கிறார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படம் குறித்த அறிவிப்பை கமல்ஹாசன் பிக்பாஸ் மேடையில் வெளியிடுவார். அதற்காகவே சிவகார்த்திகேயன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.   

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.