தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராஜுவிற்கு கிடைத்த பணம் இவ்வளவா ? வெளியான தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராஜுவிற்கு கிடைத்த பணம்  தொடர்பாக தகவல் ஒன்று பரவி வருகிறது. 

News image
Updated On :17 ஜனவரி 2022, 6:14 am

DIN

இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் பிரபலமான போட்டியாளர்கள் அதிகம் இல்லாததால் மக்களிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வம் குறைவாகவே இருந்தது. ஆனால் சில வாரங்களில் பார்வையாளர்களின் ஆர்வத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி ஈர்த்தது. 

குறிப்பாக பாவனி, அபிநய், அமீர் போன்றோர் சமூக வலைதளங்களில் அதிகம் பேசுபொருளாக இருந்தனர். மேலும் மக்களின் ஆதரவை ராஜு துவக்கத்தில் இருந்தே பெற்றார். மற்ற போட்டியாளர்கள் அவர் அளவுக்கு பெரிதாக சோபிக்கவில்லை. 

இதனால் அனைவரும் கணித்தபடியே ராஜுவே பிக்பாஸ் டைட்டிலை கைப்பற்றினார். இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வென்ற ராஜுவிற்கு ரூ.50லட்சம் கிடைத்துள்ளது.

மேலும் 16 வாரங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு ஊதியமாக ரூ.21 லட்சம் ராஜுவிற்கு கிடைத்துள்ளது. ஆக மொத்தம் ரூ.71 லட்சத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராஜு வெளியேறியிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.