நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விஜய்க்கு வில்லியாக சமந்தா?

தளபதி 67 படத்தில் நடிகை சமந்தா எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :21 ஜூலை 2022, 6:33 am

தளபதி 67 படத்தில் நடிகை சமந்தா எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 67 படத்தை இயக்கவிருக்கிறார். இன்னும் முறையான அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. 

விஜய் தற்போது நடித்துவரும் வாரிசு படத்தை விட தளபதி 67 படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். பீஸ்ட் பட தோல்விக்கு தளபதி 67 படம்தான் பதிலடி கொடுக்கும் விதமாக இருக்கும் என்பது எண்ணமாக இருக்கிறது. 

இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பதும் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைப்பதும் மட்டுமே உறுதியாகியுள்ளது. தற்போது லோகேஷ் இந்தப் படத்தின் முன் கட்ட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறார். 

இந்த நிலையில் நடிகை சமந்தா இந்தப் படத்தில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா தற்போது தி ஃபேமிலி மேன் 2, புஷ்பா பட ஊ சொல்றியா மாமா பாடல் என இந்திய அளவில் பிரபலமாக இருக்கிறார்.

அவரை நடிக்க வைத்தால் படத்துக்கு இந்திய அளவில் வரவேற்பு இருக்கும் என்பது லோகேஷின் எண்ணமாக இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.