பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களாக ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது. கிட்டத்தட்ட 3 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் தனியாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிக்பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்துவருகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இதன் காரணமாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரபலங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் துவங்கவிருக்கிறது. அதற்கான முன்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ரக்ஷன்

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரக்ஷன். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக தொகுத்து வழங்கிவருகிறார்.
துல்கர் சல்மானுடன் இவர் இணைந்து நடித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது ஒரு படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இவர் கலந்துகொள்ள அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
திவ்யதர்ஷினி

சின்னத்திரை தொடர்களில் நடித்திருந்தாலும் காபி வித் டிடி நிகழ்ச்சி தான் திவ்யதர்ஷினியை ரசிகர்களிடம் அதிகம் கொண்டு சேர்த்தது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தனது கலகலப்பான பேச்சால் பெரிதும் கவர்ந்தார்.
தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் காபி வித் காதல் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் டிடி நடித்துள்ளார். ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் விஜய் டிவியின் முகமாக ஒரு போட்டியாளர் கலந்துகொள்வார். அந்த வகையில் இந்த முறை டிடி கலந்துகொள்வார் என்கிறார்கள்.
கார்த்திக் குமார்

யாரடி நீ மோகனி, வெப்பம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் கலக்கியவர் கார்த்திக் குமார். தற்போது நகைச்சுவை பேச்சாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார். மாதவனின் ராக்கெட்ரி படத்தில் முக்கிய வேடத்தில் கார்த்திக் குமார் நடித்திருந்தார்.
சமீபத்தில் இவர் இரண்டாவதாக அம்ருதா ஸ்ரீநிவாசனை திருமணம் செய்துகொண்டிருந்தார். இவரது முதல் மனைவியும் பாடகியுமான சுசித்ராவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடகி ராஜலெட்சுமி

செந்தில் குமார் - ராஜலெட்சுமி தம்பதி விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாட்டுப்புற பாடல்களைப் பாடி பிரபலமானார்கள். இவர்கள் இணைந்து பாடிய சின்ன மச்சான் பாடல் மிகவும் பிரபலம். மேலும் புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி பாடலை ராஜலட்சுமி பாடி அசத்தினார். பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் பட்டியலில் ராஜலட்சுமியின் பெயரும் அடிபடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தோ்வு வினாத்தாள்கள் கசிவு விவகாரம்: போராட்டக்காரா்களுடன் ஜாா்க்கண்ட் அரசின் பேச்சு தோல்வி

ஹிமாசல்: மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து 7 போ் உயிரிழப்பு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நில மோசடி: மேலும் ஒருவா் கைது
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



