துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்த நடிகர்!

நடிகர் சல்மான் கான் துப்பாக்கி உரிமம் கோரி மும்பை காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். 
துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்த நடிகர்!
துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்த நடிகர்!
Published on
Updated on
1 min read

நடிகர் சல்மான் கான் துப்பாக்கி உரிமம் கோரி மும்பை காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். 

சித்து மூஸேவாலா படுகொலையைத் தொடர்ந்து சல்மான் கானுக்கும் அவரது தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் துப்பாக்கி உரிமம் கோரியுள்ளார். 

தெற்கு மும்பை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை நடிகர் சல்மான் கான் சென்று புதிதாக பதவியேற்றுள்ள ஆணையர் விவேக் பன்சால்காரை சந்தித்தார். 

இது குறித்து அவரிடம் கேட்டபோது, காவல் ஆணையர் தனது நண்பர் என்றும், அவர் பொறுப்பேற்றதற்கு வாழ்த்து கூறச் சென்றதாகவும் நடிகர் சல்மான்கான் குறிப்பிட்டார். 

மரியாதை நிமித்தமாக காவல் ஆணையரை சந்தித்ததாகவும், வேறு எந்த வழக்கிற்காகவும் வழக்கு விவகாரம் தொடர்பாக காவல் நிலையம் வரவில்லை எனவும் விளக்கமளித்தார். 

மேலும், சட்டம் - ஒழுங்கு பிரிவு காவல் இணை ஆணையர் விஷ்வாஸ் பாட்டீலையும் சந்தித்தார்.  

இது குறித்து மும்பை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, தற்காப்பிற்கான நடிகர் சல்மான் கான் துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளார். அவருக்கு மிரட்டல் விடுத்து வந்த கடிதத்தைத் தொடர்ந்து தற்காப்பிற்காக அவர் ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதி கோரியுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டது.

கடந்த மாதம் சல்மான் கானுக்கும் அவரது தந்தைக்கும் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. பஞ்சாப் பாடகர் சித்து மூஸேவாலாவை படுகொலை செய்த லாரன்ஸ் பிஸ்னோய் குழுவிடமிருந்து அந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக மும்பை காவல் துறையினர் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து சல்மான் கான் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com