நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

'6 ஆண்டுகளுக்கு பிறகு...' புதிய தோற்றத்தில் நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:24 pm IST

நடிகர் கார்த்தி புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், மித்ரன் இயக்கத்தில் சர்தார் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். 

மேலும் சூர்யா - ஜோதிகா தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படம் வெளியீட்டுக்கு தயாராகியிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். 

ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் புதிய வெளியீட்டுத் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

Story image

இதன் ஒரு பகுதியாக பொன்னியின் செல்வன் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதியும், சர்தார் தீபாவளிக்கும் வெளியாகின்றன. இந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீசை தாடியில்லாத புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 

Story image

அவரது பதிவில், வழக்கமான ஒன்றிலிருந்து வெளியேறி புதிதாக மாறுவது பயமுறுத்தக் கூடியதுதான். ஆனால் ஒரு முறை நீங்கள் அதனை செய்துவிட்டால் அது அவ்வளவு மோசமானதாக இருக்காது.  6 ஆண்டுகளுக்கு பிறகு முக சவரம் செய்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்துக்காக மீசை தாடியில்லாமல் கார்த்தி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.