தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விக்ரம் வெற்றி: கமல், சிரஞ்சீவி, சல்மான்கான், லோகேஷ் கனகராஜ் சந்திப்பு

‘விக்ரம்’ படத்தை பார்த்த சிரஞ்சீவி, சல்மான்கான் ஆகியோர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து கூறினர். 

News image
படம்: டிவிட்டர், லோகேஷ் கனகராஜ்| சிரஞ்சீவி, கமல்ஹாசன், சல்மான்கான் உடன் லோகேஷ் கனகராஜ்
Updated On :12 ஜூன் 2022, 11:46 am

DIN

‘விக்ரம்’ படத்தை பார்த்த சிரஞ்சீவி, சல்மான்கான் ஆகியோர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து கூறினர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளியானது. படம் வெளிவந்த நாள் முதல் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் திரையரங்குக் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் வசூலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் சிரஞ்சீவி தனது வீட்டில் சல்மான்கான், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் கமல்ஹாசன்  ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது டிவிட்டர் பக்கத்தில், “எனது வீட்டில் இயக்குநர்    லோகேஷ் கனகராஜ், சல்மான் கான் அவர்களுடன் ‘விக்ரம்’ படத்தின் அபாரமான வெற்றியை கொண்டாடவும் கௌரவிக்கவும் எனது இனிய பழைய நண்பர் கமலை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி. இப்படம் தீவிரமான திரில்லர் படம். நண்பனுக்கு வாழ்த்துகளும் மகிழ்ச்சியும்” என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.