தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

விக்ரம் படம் பார்க்க திரையரங்குகளில் குவியும் மக்கள்: யானை படத்தின் வெளியீட்டுத்தேதி மாற்றம்

கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் கிடைத்துவரும் வரவேற்பு காரணமாக அருண் விஜய்யின் யானை திரைப்படத்தின் வெளியீடானது ஜூலை 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

News image
Updated On :14 ஜூன் 2022, 7:25 am

கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் கிடைத்துவரும் வரவேற்பு காரணமாக அருண் விஜய்யின் யானை திரைப்படத்தின் வெளியீடானது ஜூலை 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

அருண் விஜய்யும் இயக்குநர் ஹரியும் உறவினர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. முதன்முறையாக இருவரும் இணைந்துள்ள படம் யானை. ட்ரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 

இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்க, ராதிகா, சமுத்திரக்கனி, அம்மு அபிராமி, யோகி பாபு, கேஜிஎஃப் ராமசந்திர ராஜு, ஆடுகளம் ஜெயபாலன், போஸ் வெங்கட், புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

யானை திரைப்படம் வருகிற ஜூன் 17 ஆம் தேதி திரைக்குவருவதாக இருந்தது. ஆனால் விக்ரம் படத்துக்கு மக்கள் அளித்து வரும் வரவேற்பு காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு ஜூலை 1 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரம்ஸ்டிக் நிறுவனம், விக்ரம் படத்தின் மீதான மரியாதை காரணமாக யானை திரைப்படத்தின் வெளியீடு ஜூலை 1 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விக்ரம் படத்தின் வெற்றிக்கு யானை படக் குழு சார்பாக வாழ்த்துகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.