
இயக்குநர் முத்தையாவின் அடுத்தப் படத்தில் நடிகர் ஆர்யா நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குட்டிப்புலி, கொம்பன், மருது, தேவராட்டம் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் முத்தையா. கிராமத்து பின்னணியில் உருவாகும் இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. இருப்பினும் அவரது படங்கள் குறிப்பிட்ட சாதியை ஆதரிப்பதாக குற்றச்சாட்டும் உண்டு.
இந்த நிலையில் தற்போது சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தை முத்தையா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அடேங்கப்பா! தனது மகன் இன்பநிதியைப் பார்த்து மிரளும் உதயநிதி
இந்த நிலையில் அடுத்ததாக முத்தையா இயக்கும் படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கிறாராம். மதுரை பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தை யானை பட தயாரிப்பு நிறுவனமான டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.