கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

'பாக்கியலட்சுமி' தொடரிலிருந்து விலகும் ஆர்யன்: காரணம் இதுவா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரிலிருந்து பிரபல நடிகர் விலகுகிறார். 

News image
Updated On :1 மார்ச் 2022, 10:24 am

DIN

சின்னத்திரை தொடர்களில் சமீப காலமாக இவருக்கு பதில் இவர் என்ற வார்ததையை அடிக்கடி காணமுடிகிறது. ஒரு நடிகரை ரசிகர்கள் ரசிக்க துவங்கும்போது அந்த நடிகரை மாற்றிவிடுகிறார்கள். 

இந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய மாற்றம் நிகழப்போகிறது. பாக்கியலட்சுமியின் மகனாக செழியன் என்ற வேடத்தில் நடித்து வரும் ஆர்யன் அந்தத் தொடரிலிருந்து விலகவிருக்கிறார்.

தொடரில் தனது கதாப்பாத்திரத்துக்கு போதிய முக்கியத்துவம் இல்லையென்ற காரணத்தால் அவர் இந்த முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக வேறு யார் அந்த வேடத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்பது விரைவில் தெரியவரும்.

ஆர்யன் சமீபத்தில் செம்பருத்தி தொடரில் நடிக்கும் ஷபானாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் ஆர்யன் தொடரிலிருந்து விலகியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.