நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

'ஆர்ஆர்ஆர்' படத்துக்கு இயக்குநர் ஷங்கர் விமர்சனம்

'ஆர்ஆர்ஆர்' படம் தொடர்பாக இயக்குநர் ஷங்கர் தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். 

News image
Updated On :26 மார்ச் 2022, 8:06 am

DIN

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. 

இந்தப் படத்துக்கு பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''காலத்துக்கும் எதிரொலிக்கும் கர்ஜனை. ஒப்பற்ற அனுபவத்தைக் கொடுத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி.

ராம் சரண் ஆக்ரோசமான நடிப்பும், ஜூனியர் என்டிஆரின் மிரட்டலான பங்களிப்பும் உங்கள் மனதை கவரும். உங்கள் கற்பனை தோற்கடிக்க முடியாததாக இருக்கிறது 'மகாராஜ'மௌலி'' என்று குறிப்பிட்டுள்ளார். 

Story image

இயக்குநர் ஷங்கர் தற்போது ராம்சரண் நாயகனாக நடிக்கும் ஆர்சி 15 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.