இன்றைய தேதியில், இந்திய அளவில் அதிகமாக வசூலித்த இரு ஹிந்தி படங்கள் என்ன தெரியுமா?
1. பாகுபலி 2
2. கேஜிஎஃப் 2
ஹிந்தியில் இதுவரை எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் ஹிந்தியில் டப் செய்யப்பட்ட இரு தென்னிந்தியப் படங்கள் தான் இந்திய அளவில் அதிகமாக வசூலித்துள்ளன. 2-ம் இடத்தில் இருந்த ஆமிர் கானின் டங்கல் படத்தின் வசூலைத் தாண்டி தற்போது சாதனை படைத்துள்ளது கேஜிஎஃப் 2.
யஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். கேஜிஎஃப் 2 படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப் 2 படம் முதல் நாளன்று ரூ. 134.5 கோடி வசூலித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.
இதன் ஹிந்திப் பதிப்பு தற்போது புதிய சாதனையைப் படைத்துள்ளது.
2019-ல் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கிய வார் படம், முதல் நாளன்று ரூ. 51.60 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்தது. கேஜிஎஃப் 2 ஹிந்திப் பதிப்பு அதன் சாதனையை உடைத்து முதல் நாளன்று ரூ. 53.95 கோடி வசூலித்து புதிய வரலாறு படைத்தது.
கேஜிஎஃப் 2 (ஹிந்தி) ஐந்து நாள்களில் ரூ. 200 கோடி வசூலைத் தாண்டியது. பாகுபலி 2 (ஹிந்தி) படம் ஆறாவது நாளன்று தான் இந்தியாவில் இந்த இலக்கை எட்டியது.
BIGGG NEWS... #KGF2 surpasses #Dangal *lifetime biz*... NOW, 2ND HIGHEST GROSSING *HINDI* FILM... Glorious march towards â¹ 400 cr begins... [Week 3] Fri 4.25 cr, Sat 7.25 cr, Sun 9.27 cr, Mon 3.75 cr, Tue 9.57 cr, Wed 8.75 cr. Total: â¹ 391.65 cr. #India biz. #Hindi pic.twitter.com/PdImtreDrB
â taran adarsh (@taran_adarsh) May 5, 2022
தற்போது இந்தியாவில் அதிகமாக வசூலித்த 2-வது ஹிந்திப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. ஆமிர் கானின் டங்கல் பட வசூலைத் தாண்டி ரூ. 400 கோடி வசூலை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. டங்கல் படம் இந்தியாவில் ரூ. 387.38 கோடி வசூலித்தது. நேற்று இந்தியாவில் கேஜிஎஃப் 2 (ஹிந்தி) ரூ. 8.75 கோடி வசூலித்துள்ளது. இதையடுத்து இதுவரை மொத்தமாக இந்தியாவில் கேஜிஎஃப் 2 (ஹிந்தி) ரூ. 391.65 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வார இறுதிக்குள் இதன் வசூல் ரூ. 400 கோடியை எட்டிவிடும். இதையடுத்து, இந்தியாவில் அதிக வசூலைக் கண்ட ஹிந்திப் படங்களில் முதல் இரு படங்களாக பாகுபலி 2, கேஜிஎஃப் 2 என இரு தென்னிந்தியப் படங்கள் உள்ளன. இத்தகவலை பாலிவுட் திரைப்பட விமர்சகர் தாரன் ஆதர்ஷ் வெளியிட்டுள்ளார்.
கேஜிஎஃப் 2 (ஹிந்தி): இந்திய வசூல்
2-வது நாள்: ரூ. 100 கோடி
4-வது நாள்: ரூ. 150 கோடி
5-வது நாள்: ரூ. 200 கோடி
7-வது நாள்: ரூ. 250 கோடி
11-வது நாள்: ரூ. 300 கோடி
16-வது நாள்: ரூ. 350 கோடி

ஹிந்திப் படங்களில் ரூ. 300 கோடி வசூலை எட்டிய படங்கள்: பிகே, பஜ்ரங்பைஜன், சுல்தான், டங்கல், டைகர் ஹிந்தா ஹை, பாகுபலி 2 , பத்மாவத், சஞ்சு, வார், கேஜிஎஃப் 2. இந்தப் படங்களில் ரூ. 400 கோடி மற்றும் ரூ. 500 கோடி வசூலைத் தாண்டிய ஒரே படம் - பாகுபலி 2 (ஹிந்தி) மட்டுமே.
2019-க்குப் பிறகு (வார் படம்) ரூ. 300 கோடியை இந்தியாவில் வசூலித்த முதல் ஹிந்திப் படம் என்கிற பெருமையையும் கேஜிஎஃப் 2 பெற்றுள்ளது.
இந்தியாவில் அதிக வசூலைக் கண்ட ஹிந்தி படங்கள்
1. பாகுபலி 2 - ரூ. 510.99 கோடி
2. கேஜிஎஃப் 2 - ரூ. 391.65 கோடி (இதுவரை)
3. டங்கல் - ரூ. 387.38 கோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயநிதியின் பேச்சு அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை: திருமாவளவன்
தெய்வ தரிசனம்... பித்ருதோஷ நிவர்த்திக்கு கோடியக்கரை அமிர்தகடேசுவரர்!

தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி | TVK | DMK

பிக் பாஸ் - காமன் மேன் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு! நடுவர்களாக ஓவியா, ஆரி, ராஜு!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



