சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பத்தல பத்தல பாடல் விவகாரம்: ராஜ்கமல் நிறுவனத்துக்கு நோட்டீஸ்

கமலின் விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடல் விவகாரம் தொடர்பாக ராஜ்கமல் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

News image
Updated On :15 மே 2022, 1:20 pm

DIN

கமலின் விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடல் விவகாரம் தொடர்பாக ராஜ்கமல் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் விக்ரம். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கமல் படத்திற்கு முதல்முறையாக அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் கமல்ஹாசன் எழுதி பாடிய 'பத்தல... பத்தல...' எனும் பாடல் மே 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகிறது. 

இதனிடையே பத்தல... பத்தல பாடல் வரிகைகள் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வரிகளை 2 நாள்களில் நீக்கி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் ராஜ்கமல் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.