‘கமல் சார் இயக்கத்துல நடிக்கணும்’: விருப்பம் தெரிவித்த விஜய் சேதுபதி
நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.


நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம்(மே-15) நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி “என் வாழ்க்கையில் ஒருமுறையாவது கமல் சாருடன் இணைந்து நடித்த விட வேண்டும் என நினைத்திருக்கிறேன். ‘கமல்60’ விழாவில் பங்கேற்றபோது சாரிடம்(கமல்) உங்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்குமா எனக் கேட்டேன். இப்போது அது நடந்துவிட்டது. எனக்கு இன்னொரு ஆசையும் இருக்கிறது. கமல் சார் இயக்கத்தில் நான் நடிக்க வேண்டும். அவர் சொல்லித் தருவதை அருகிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: ‘தமிழ் வாழ்க’ எனக் கூறுவது என் கடமை: கமல்ஹாசன்
பின் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது “தம்பி விஜய் சேதுபதியைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போல உள்ளது. உடலமைப்பில் பார்ப்பதற்கு அண்ணன் போல இருந்தாலும் எல்லோரும் அவரை பேபி பேபி என்றுதான் அழைக்கிறார்கள். நான் 22 வயதில் ஒரு வருடத்திற்கு 22 படங்கள் நடித்தேன். தற்போது அதை தம்பி விஜய் சேதுபதி 44 வயதில் செய்துக்கொண்டு இருக்கிறார். பெருமையாக இருக்கிறது” எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...