ஜூனியர் என்டிஆர் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்
இந்தப் படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.


பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம் என சமீபகாலமாக வெளியான, வெளியாகவுள்ள பல பெரிய படங்களுக்கு அனிருத் தான் இசை. தமிழ்த் திரையுலகின் நெ.1 இசையமைப்பாளராக உள்ள அனிருத், அடுத்ததாக பெரிய தெலுங்குப் படம் ஒன்றுக்கும் இசையமைக்கிறார்.
சிரஞ்சீவி நடிப்பில் கொரடாலா சிவா இயக்கிய படம் - ஆச்சார்யா. ஏப்ரல் 29 அன்று திரையரங்குகளில் வெளியான ஆச்சார்யா படம், ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கொரடாலா சிவா. இப்படத்துக்கு இசை - அனிருத். அவர் இசையமைக்கும் 4-வது தெலுங்குப் படம் இது. ரத்னவேலு, சாபு சிரில், ஸ்ரீகர் பிரசாத் எனப் பல பிரபலமான தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள்.
ஜூனியர் என்டிஆர் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அதையொட்டி அவர் நடிக்கும் 30-வது படம் பற்றி அறிவிப்பு விடியோவுடன் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...