எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

போனி கபூருக்கு இந்த நிலைமையா? மோசடியால் ரூ. 4 லட்சம் இழப்பு

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ. 3.82 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 மே 2022, 5:03 am

DIN


பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரின் கிரெடிட் கார்டை தவறாகப் பயன்படுத்தி ரூ. 3.82 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

போனி கபூரின் வங்கிக் கணக்கிலிருந்து பிப்ரவரி 9-ம் தேதி ரூ. 3.82 லட்சம் மோசடியாக பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதை அறிந்த போனி கபூர், சம்பந்தப்பட்ட வங்கியிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டிருக்கிறார்.

இதன்பிறகு, அவர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். மும்பையிலுள்ள அம்போலி காவல் நிலையத்தில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்ட் தகவல்களை தன்னிடம் யாரும் கேட்கவில்லை என்றும், இதுதொடர்பாக எந்த அலைபேசியும் வரவில்லை என்றும் போனி கபூர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

போனி கபூர் கிரெட்டி கார்டை பயன்படுத்தும்போது அதன் தரவுகளை யாரேனும் சேகரித்திருக்கலாம் என காவல் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அவரது கார்டிலுள்ள பணம் குருகிராமிலுள்ள ஒரு நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.