காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துக்கு வசூல் எவ்வளவு?: விக்னேஷ் சிவன் தகவல்
நீங்கள் வாங்கிய ஒவ்வொரு டிக்கெட்டிலும் அன்பை வெளிப்படுத்தினீர்கள் என்று ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த படம் - காத்துவாக்குல ரெண்டு காதல். இசை - அனிருத். கடந்த மாத இறுதியில் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்தார்கள்.
இந்தப் படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேற்று (மே 27) வெளியானது.
இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துக்கு இதுவரை உலகளவில் ரூ. 66 கோடி வசூல் கிடைத்துள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். நீங்கள் வாங்கிய ஒவ்வொரு டிக்கெட்டிலும் அன்பை வெளிப்படுத்தினீர்கள் என்று ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...