திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஹாலிவுட் பயிற்சியாளருடன் சண்டைப் பயிற்சி செய்யும் சமந்தா! (விடியோ)

யசோதா படத்திற்காக நடிகை சமந்தா, ஹாலிவுட் பயிற்சியாளருடன் சண்டைப் பயிற்சி எடுக்கும் விடியோ வெளியாகியுள்ளது. 

News image
Updated On :1 நவம்பர் 2022, 10:45 am

யசோதா படத்திற்காக நடிகை சமந்தா, ஹாலிவுட் பயிற்சியாளருடன் சண்டைப் பயிற்சி எடுக்கும் விடியோ வெளியாகியுள்ளது. 

ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் யசோதா. 5 மொழிகளில் தயாரான இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தா சிறப்பாக நடித்துள்ளதாக படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது.

யசோதா படத்தின் டிரைலர் வெளியாகி 2 நாட்களில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது. இப்படம்,நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் சமந்தா அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளதை டிரெயிலரில் பார்த்தோம். அதற்கு பின்புறம் உள்ள சமந்தாவின் உழைப்பினை படக்குழுவினர் விடியோவாக வெளியிட்டு உள்ளனர். இதில் ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர் யான்னிக் பென் பயிற்சி தரும் விடியோ வெளியாகி படத்தைப் பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.  

சமீபத்தில் சமந்தாவுக்கு தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டதை கூறியிருந்தார். இருந்தும் இந்த உழைப்புதான் அவரை முன்னணி கதாநாயகியாக இருக்க வைப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.