பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு வெளியானதால் கூடுதலாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
சர்தார் படத்தில் கார்த்தியுடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில், இந்தப் படம் இதுவரை உலகமெங்கும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விநியோகித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்களுக்கு இப்படம் நல்ல லாபத்தை கொடுத்ததால் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் படத்தின் அபார வசூல் வெற்றியால் இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மன் லான்சன் காரைப் பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அனுஷ்காவின் பிறந்தநாளில் வெளியான புதிய பட அறிவிப்பு!
பூஜையுடன் தொடங்கியது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்!
நாயகி மீண்டும் வராள்: யசோதா படத்தின் ப்ரமோஷனுக்கு தயாராகும் சமந்தா!
சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு?
விஜய் பட வில்லனும் அஜித் படத்தின் குழந்தை நட்சத்திரமும் இணையும் புதிய படம்!