நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி, புதிய போஸ்டர் ஒன்றை 'இந்தியன் 2’ படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி திரையுலக, அரசியல் பிரபலங்கள் பலரும் இன்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கமல் தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து வரும் நிலையில் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டு, 'நீங்கள் எங்கள் பொக்கிஷம், பன்முகத் திறமை கொண்ட கமல்ஹாசன் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | 35 ஆண்டுகளுக்குப் பின் இணையும் கமல் - மணிரத்னம்!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
ஜெயமோகன் எழுத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘ரத்தினக் குவியல்...!’

கோழிப் பண்ணைகளில் ஈக்கள் உற்பத்திக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தற்படம் எடுக்கும்போது 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞா் உயிருடன் மீட்பு: 13 மணி நேரம் போராடி மீட்ட ராணுவ வீரா்கள்

வேட்புமனு சரிபாா்ப்பு: 20 காரணங்கள்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

