கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மீண்டும் ’ஆதிபுருஷ்’ படப்பிடிப்பு?

பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2022, 2:37 pm

DIN

பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி விமர்சனங்களை சந்தித்தது. ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக கிரித்தி ஷனோன் நடிக்க, சயீப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார்.  ஹிந்து கடவுள்களை தவறாக சித்தரிப்பதாக பாஜகவினர் ஆதிபுருஷ் டீசருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

மற்றொரு புறம் இந்தப் படத்தின் சிஜி காட்சிகள் கார்டூன் தொலைக்காட்சிகளை விட மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். 

மேலும், இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கிராபிக்ஸ் பணிகள் மற்றும் வாரிசு, துணிவு படங்களுடன் மோதுவதைத் தவிர்க்கும் பொருட்டு அடுத்தாண்டு மே மாதத்தில் படத்தை திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் கூடுதல் பணிகளுக்காக மீண்டும் சில நாள்கள் படப்பிடிப்பை நடத்த ‘ஆதிபுருஷ்’ குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.