ராஷ்மிகாவை விமர்சிக்கும் கன்னட ரசிகர்கள்!

நடிகை ராஷ்மிகாவை கன்னட ரசிகர்கள் தரம்தாழ்ந்து ஆபாச வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். 
ராஷ்மிகாவை விமர்சிக்கும் கன்னட ரசிகர்கள்!

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. தற்போது, நடிகர் விஜய் உடன் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். 

அமிதாப் பச்சனுடன் சேர்ந்து பாலிவுட்டிலும் கால்பதித்து விட்டார். அவர் முதன்முதலில் அறிமுகமாகிய கன்னடத்தை மறந்து விட்டதாக கன்னட ரசிகர்கள் ஆவேசமடைந்துள்ளனர். ராஷ்மிகாவின் முதல் படம் கிர்க் பார்டி எனும் கன்னட படம். இதை இயக்கியவர் ரிஷப் ஷெட்டி. சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாகிய ‘காந்தாரா’ படத்தினை இயக்கியவரும் இவர்தான் ரிஷப் ஷெட்டி. 

கன்னட  வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் ராஷ்மிகாவிடம் காந்தாரா படத்தினை பார்த்தீர்களா என்ற கேள்விக்கு இன்னும் பார்க்கவில்லை என பதிலளிப்பார். இதனால் கன்னட ரசிகர்கள் ராஷ்மிகாவை ஆபாச வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் வசைபாடி வருகின்றனர். மேலும் இனிமேல் கன்னட படத்தில் ராஷ்மிகா நடிக்க கூடாதெனவும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com