12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மம்மூட்டி - ஜோதிகா நடிக்கும் 'காதல்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!  

நடிகை ஜோதிகா பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கும் ‘காதல்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

Published On :

தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமான நடிகை ஜோதிகாவின் பிறந்தநாளன்று புதிய படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 

ஜோதிகா கடைசியாக 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன் நடித்த ‘உடன்பிறப்பு’ படம் வெளியானது. அவரது பிறந்தநாளன்று பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. படத்திற்கு ‘காதல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தினை ஜியோ பேபி இயக்குகிறார். இவர் இயக்கத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரீமேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Story image

தற்போது காதல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரை வெளியிட்டு நடிகர் சூர்யா, “ மனதைக் கவரும், ஆழமான, நன்கு எழுதப்பட்ட திரைப்படம் நம்மை நோக்கி வருகிறது” என பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.