ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வடிவேலு குரலில் வெளியானது ‘அப்பத்தா’ பாடல்! 

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு குரலில் முதல் பாடலாக ‘அப்பத்தா’ பாடல் விடியோ வெளியானது. 

News image
Updated On :14 நவம்பர் 2022, 2:19 pm

DIN

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு குரலில் முதல் பாடலாக ‘அப்பத்தா’ பாடல் விடியோ வெளியானது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு  வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லைக்கா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

ஏற்கெனவே இந்த படத்திலிருந்து வெளியான போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியானது. 

‘அப்பத்தா’ எனத் தொடங்கும் அந்தப் பாடலை வடிவேலு பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்த பாடலுக்கு பிரபுதேவா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.