கார்த்தியின் ‘ஜப்பான்’: முதல் பார்வை போஸ்டர்  வெளியானது! 

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜப்பான்’படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 
கார்த்தியின் ‘ஜப்பான்’: முதல் பார்வை போஸ்டர்  வெளியானது! 

நடிகர் கார்த்தி நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ட்ரீம் வாரியர் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. 

இந்தப் படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரவிவர்மன் - ஒளிப்பதிவு. பிலோமின் ராஜ்- எடிட். அன்பறிவு சண்டை பயிற்சியாளர்களாக தெர்வுசெய்யப்பட்டுள்ளனர். 

கார்த்தியின் ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு உருவாகும் ஜப்பான் படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியானது. 

4 மொழிகளில் படம் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளிலும் போஸ்டர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com