பனையூரில் நடிகர் விஜய்: ரசிகர்களை சந்திக்க காரணம் என்ன?

பனையூரில் நடிகர் விஜய்: ரசிகர்களை சந்திக்க காரணம் என்ன?

நடிகர் விஜய் சென்னையில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு சென்றுள்ள விடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. 
Published on

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் பொங்கலுக்கு வர உள்ளது. சமீபத்தில் ரஞ்சிதமே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. 

விழாக்காலங்களில் நேரடித்தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திரத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் எனும் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. எண்ணற்ற தெலுங்குத்திரைப்படங்கள் தமிழகத்தில் எவ்விதத் தடையுமின்றி வெளியாகிக் கொண்டிருக்கிற நிலையில், தமிழ்த்திரைப்படங்கள் வெளியாவதற்குக் கெடுபிடி விதித்திருக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு மிகத்தவறான முன்னுதாரணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் விஜய் அவரது ரசிகர்களை அடிக்கடி சந்திப்பது வழக்கம். நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்தித்து வருகிறார். ரசிகர்களுக்காக பிரியாணி செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பனையூரில் விஜய் ரசிகர்கள் கூட்டமாக கூடியுள்ளனர். 

ட்விட்டரில் தளபதி விஜய், வாரிசு என விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com