''செம்பருத்தி'' தொடர் மூலம் பிரமபலமான நடிகர் கார்த்திக் ராஜ் மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள சின்னத் திரை தொடரில் நடிக்கவுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செம்பருத்தி' தொடரில் ஆதி கதாபாத்திரம் மூலம் நடித்தவர் கார்த்திக் ராஜ். 'செம்பருத்தி' என்ற கிராமத்தும் பெண்ணை திருமணம் செய்துகொண்ட தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களை வென்றவர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடரின்போது பல பெண் ரசிகர்களைக் கொண்ட நடிகர் கார்த்திக் ராஜ், 'செம்பருத்தி' தொடரில் பல குடும்பத் தலைவிகளின் ஆதரவையும் பெற்றவரானார்.

எனினும், 'செம்பருத்தி' தொடரில் அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. திரைப்படத்தில் நடிக்கச் சென்றதால், அவருக்கு பதில் நடிகர் அக்னி அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.
கார்த்திக் ராஜ் நடித்த 'பிளாக் அண்ட் வொயிட்' திரைப்படம் நேரடியாக ஜீ தமிழில் பிரீமியர் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஜீ தமிழில் நடிகர் கார்த்திக் ராஜ் நடிக்கவுள்ளார்.

பெங்காலி மொழியில் ஒளிபரப்பான ’கிருஷ்ணா கோலி’ என்ற தொடரைத் தழுவி தமிழில் 'கார்த்திகை தீபம்' என்ற பெயரில் புதிய தொடர் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தொடரின் நாயகனாக கார்த்திக் ராஜ் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ஆர்த்திகா நடிக்கவுள்ளார். இவர் 'பிளாக் அண்ட் வொயிட்' படத்தில் கார்த்திக் ராஜ் உடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் விரைவில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது. இதனால், கார்த்திக் ராஜின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி அரசு மருத்துவமனையில் விரைவில் சூரியஒளி மின்சாரத் திட்டம்

ஷேக் ஹசீனாவும் இந்தியாவின் தா்மசங்கடமும்...
சிப்காட் விவகாரம்: கருத்துக் கேட்பு கூட்டத்தை வலியுறுத்தும் கிராமத்தினா்

மேட்டூர் அணை நிலவரம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



